/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டல்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
ஓட்டல்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 07, 2025 07:03 AM
தேனி : தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ஆண்டிற்கு ரூ. 12லட்சத்திற்கு மேல் விற்பனையில் ஈடுபடும் நிறுவனம், ரோட்டோர உணவகம் என இரு பிரிவில் வழங்கப்படுகிறது. விண்ணப்பிப்போர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பார்சல், உணவு பரிமாற பயன்படுத்தக்கூடாது. உணவுப்பாதுகாப்புத்துறையின் உரிமம், பதிவு சான்றிழ் பெற்றிருக்க வேண்டும். நிறுவனத்தில் ஒருவர் உணவுப்பாதுகாப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
மட்கும் தன்மை உடைய பொருட்களை பார்சல் வழங்க பயன்படுத்த வேண்டும். விருப்பமுள்ளோர் ஆக., இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஓட்டல்களுக்கு ரூ. ஒரு லட்சம், ரோட்டோர கடைகளுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு பெருந்திட்ட வளாகத்தில் உள்ள உணவுப்பாதுகாப்பு, மருந்து நிர்வாகத்துறை அலுவலகத்தை நேரில் அணுகலாம். அல்லது 04546 252 549 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.