ADDED : நவ 10, 2024 06:55 AM
போடி : போடி புதுக்காலனி பரமசிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரவீனா 43. இவர் சென்னையில் குழந்தை, முதியோர் ஆலோசனை மையம் நடத்தி வருகிறார்.
போடியில் உள்ள இவரது வீட்டில் தச்சு வேலை செய்வதற்காக பொறியாளர் செந்தில் பாண்டி ஆட்களை அழைத்து சென்றுள்ளார். அப்போது வீடு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.
இதனை அலைபேசி மூலம் போட்டோ எடுத்து பிரவீனாவிற்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
பிரவீனா நேற்று வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டும், பீரோவில் இருந்த ரூ. ஒரு லட்சத்து 70 ஆயிரம் மதிப்பு உள்ள வளையல், ஜிமிக்கி, தோடு சேர்த்து 4 அரை பவுன் நகையும், வெள்ளி, வெண்கல குத்துவிளக்கு, டி.வி., கம்ப்யூட்டர், சி.சி.டி.வி., கேமரா, சைக்கிள் திருடு போனது தெரிந்தது. பிரவீனா புகாரில் போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.