/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி தோட்டக்கலை பேராசிரியர்கள் விளக்கம்
/
ரூகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி தோட்டக்கலை பேராசிரியர்கள் விளக்கம்
ரூகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி தோட்டக்கலை பேராசிரியர்கள் விளக்கம்
ரூகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி தோட்டக்கலை பேராசிரியர்கள் விளக்கம்
ADDED : ஏப் 18, 2025 06:46 AM
தேனி: தென்னை கீற்றுகளில் ரூகோஸ் வெள்ளை ஈக்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இவற்றால் மகசூல் பாதிக்கும் சூழலும் உருவாகிறது. இது குறித்து பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி பயிர்பாதுகாப்புத்துறை பேராசிரியர்கள் சுகன்யா, முத்தையா ஆகியோர் வெள்ளை ஈக்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தென்னையில் அதிகம் பரவியது. தற்போது வாழை, சப்போட்டா, மக்காச்சோளம், மா, முந்திரி, அலங்கார செடிகளிலும் காணப்படுகிறது. இந்த வகை ஈக்கள் தாக்கியதின் அறிகுறியாக பூச்சிகள் இலைச்சாற்றை உறிஞ்சும். தேன் போன்ற கழிவுப்பொருளின் படிவால் இலைகளில் கருமையாக பூஞ்சை வளரும்.
இலைகள் மஞ்சளாக மாறி உதிர்ந்து விடும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தென்னை கீற்றுகளின் அடிப்பகுதியில் தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும்.
மஞ்சள்நிற பாலித்தீன் தாள்களில் இருபுறமும் விளக்கெண்ணெய் தடவி, ஏக்கருக்கு 20 தென்னை மரத்தில் 6 அடி உயத்தில் வைக்க வேண்டும். என்கார்சியா ஒட்டுண்ணிகளை பயன்படுத்தலாம். சீத்தா, வாழை, கல்வாழை செடிகளை ஊடுபயிராக நடலாம்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மி.லி., வேப்ப எண்ணெய், ஒட்டும் திரவம் ஒரு மி.லி கலந்து கீற்றுகளின் அடிப்பகுதியில் தெளிக்கவும். இலைகள் மேல் படர்ந்தள்ள கரும் பூஞ்சைகளை நீக்க 25 கிராம் மைதாமாவு பசையை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும். பூச்சிகொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்த்து, வேளாண், தோட்டக்கலைத்துறையினர் பரிந்துரைத்த உரங்களை பயன்படுத்த வேண்டும் என்றனர்.