/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி
/
தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி
தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி
தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி
ADDED : பிப் 17, 2025 05:03 AM

தேனி: 'தென்னையில்ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்கத்தை கட்டுப்படுத்த தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா ஆலோசனை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: தென்னையில் இவ்வகை ஈக்கள் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளன. இவை மட்டையில் உள்ள கீற்றுகளின் உட்பகுதியில் இருந்து, இலையில் உள்ள சாறுகளை உறிஞ்சுகின்றன. திரவம் மற்ற கீற்றுக்கு மேல் பகுதியில் பட்டு அப்பகுதி கருப்பு நிறமாகி ஒளிச்சேர்க்கை தடைபடுகிறது. வெப்பநிலை உயரும் நாட்களில் இப்பூச்சிகளின் தாக்குதல் அதிகரிக்கும்.
இடைவெளி விட்டு ஒரு எக்டேருக்கு 175 கன்றுகள் நட வேண்டும். பூச்சி பாதித்த பகுதிகளில் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்தும், 'என்கார்சியா' என்ற ஒட்டுண்ணி குழவியையும் பயன்படுத்தலாம். மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகள் ஏக்கருக்கு 8 முதல் 15 வரை வைக்கலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். தாக்குதல் காணப்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மி.லி., வேப்ப விதை சாறு கலந்து தெளிக்கலாம்.