/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெள்ளத்தில் சிக்கிய நாயை மீட்ட மனிதநேயம்
/
வெள்ளத்தில் சிக்கிய நாயை மீட்ட மனிதநேயம்
ADDED : அக் 19, 2025 03:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அணைப்பிள்ளையார் அணையில்் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க தடை விதித்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இச் சூழலில் பாதை தவறி வந்த நாய் தடுப்பணை வெள்ள நீரில் சிக்கி தத்தளித்தது. இதனை கண்ட போலீசார் அங்குசாமி, போடி பெருமாள் கோயில் தெரு விக்னேஷ், அவர்களது நண்பர்களும் சேர்ந்து தடுப்பணையில் இறங்கி வெள்ள நீரில் தத்தளித்த நாயை காப்பாற்றினர். பொதுமக்கள் இவர்களின் மனித நேயத்தை பாராட்டினர்.