/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்
ADDED : அக் 19, 2025 03:14 AM
தேனி: மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்காக 8 வட்டாரங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த பள்ளிக்கல்வி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
அதிகாரிகள் கூறியதாவது: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ வசதிகள் எளிதாக கிடைக்கும் வகையில் வட்டாரத்திற்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாமில் மருத்துவ மதிப்பீடு, மாற்றுத்திறனாளிகளுக்குான தேசிய அடையாள அட்டை பதிவு செய்தல், ஆதார் பதிவு செய்தல், புதிதாக ரயில், பஸ் பாஸ்கள் விண்ணப்பித்தல், உபகரணங்கள் பெற விண்ணப்பித்தல், அறுவை சிகிச்சை, பரிசோதனைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரை கடிதம் வழங்குதல், உதவித்தொகை பெற விண்ணப்பித்தல் ஆகிய சேவைகள் வழங்கப்பட உள்ளன. முகாம் நடைபெறும் இடங்கள், தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.