/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒரு நாள் முன்னதாக மூணாறு வந்த ஹங்கேரி பிரதமர்
/
ஒரு நாள் முன்னதாக மூணாறு வந்த ஹங்கேரி பிரதமர்
ADDED : ஜன 13, 2025 01:16 AM

மூணாறு: ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர்ஓர்பன் ஒரு நாள் முன்னதாக நேற்று மூணாறுக்கு வந்தார்.
கேரளாவுக்கு மனைவி, இரண்டு மகள்களுடன் ஜன.,3ல் வந்த பிரதமர் விக்டர்ஓர்பன், இன்று காலை மூணாறுக்கு வருவதாக பயணம் திட்டமிடப்பட்டது. மாநிலத்தில் ஆலப்புழா, குமரகம், அதிரப்பள்ளி, வாழச்சால், கொச்சி ஆகிய பகுதிகளை குடும்பத்தினருடன் பார்வையிட்டவர், நேற்று முன்தினம் இரவு தேக்கடி வந்தார். அங்கிருந்து நேற்று பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டு மாலை 5:00 மணிக்கு மூணாறு வந்தார். அவர் மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட விரிபாறை பகுதியில் வனத்தினுள் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். விடுதி வளாகம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. தவிர அவரது பயண விபரம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதனை உறுதிபடுத்தும் வகையில் இன்று மூணாறுக்கு வருவதாக கூறப்பட்ட நிலையில் நேற்று மாலை ஒரு நாள் முன்னதாக வந்தார் என்பது குறிப்பிடதக்கது.