நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: உப்பார்பட்டி காமாட்சியம்மன் கோயில் தெரு முருகேசன் 57. அதேப்பகுதியை சேர்ந்த மனோகரன் 50. இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளன. முருகேசன் வீட்டின் முன் மனோகரன் பூச்செடி வளர்த்தார்.
அச்செடி முருகேசனின் வீட்டை மறைத்து வளர்ந்ததால், அதில் காய்ந்த குச்சிகளை முருகேசன் ஒடித்தார். இந்த முன் விரோதத்தில் மனோகரன், மனைவி செல்லத்தாய் முருகேசனை திட்டி தாக்கினர். காயடைந்த முருகேசன் தேனி மருத்துவக்கல்லுாரி சேர்க்கப்பட்டார். புகாரில் வீரபாண்டி போலீசார் கணவன், மனைவியை கைது செய்தார்.