/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தெருக்குழாய் சண்டையில் கணவன், மனைவி கைது
/
தெருக்குழாய் சண்டையில் கணவன், மனைவி கைது
ADDED : ஜன 27, 2025 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : பெரியகுளம் ஒன்றியம் சங்கரமூர்த்திபட்டி மேலத்தெரு கணேசன் 60. இவரது மனைவி மாரியம்மாள் 55. இவர்களது வீட்டருகே தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றார். அதற்கு இதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் 60, இங்கு தண்ணீர் பிடிக்கக் கூடாது என்றார். ஏன் பிடிக்கக் கூடாது என கேட்ட மாரியம்மாளை, ராமச்சந்திரன் தாக்கினார்.
இதனை தட்டிக்கேட்ட கணேசன், மாரியம்மாள் இருவரையும் ராமச்சந்திரன், அவரது மனைவி முருகேஸ்வரி 55, கட்டையால் தாக்கி காயப்படுத்தினர். பாதிக்கப்பட்ட இருவரும் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜெயமங்கலம் போலீசார் ராமச்சந்திரன், முருகேஸ்வரியை கைது செய்தனர்.