/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர் விபத்தில் கணவன், மனைவி காயம்
/
டூவீலர் விபத்தில் கணவன், மனைவி காயம்
ADDED : பிப் 21, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி கம்பெனி தெருவைச் சேர்ந்தவர் அய்யங்காளை 52. தேவதானப்பட்டி பகுதியில் இவரது தென்னந்தோப்புக்கு டூவீலரில் மனைவி தனலட்சுமியுடன் 40. சென்றார். டூவீலரை அய்யங்காளை ஓட்டினார். அட்டணம்பட்டி பைபாஸ் ரோடு அருகே பின்னால் வந்த டூவீலர், அய்யங்காளை டூவீலர் மீது மோதியது. இதில் கணவன், மனைவி காயமடைந்தனர்.
வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய ஆண்டிபட்டி வெள்ளையன் தெருவைச் சேர்ந்த அய்யாத்துரையிடம் விசாரணை செய்து வருகிறார்.-