ADDED : ஜன 01, 2026 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே மணியம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் திவ்யா 28. கணவர் நாராயணன் 35. இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி மனைவி மீது சந்தேகப்பட்டு தகாத வார்த்தையால் பேசி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் திவ்யா ஆறு மாதங்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நாராயணன் நேற்று மாமியார் வீட்டுக்கு சென்று திவ்யாவை அடித்து துன்புறுத்தி உள்ளார்.
தடுக்க வந்த மாமியார் நாகமணியை அடித்து உள்ளார். மனைவியின் சேலையை பிடித்து இழுத்து மானபங்க முயற்சி செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
திவ்யா புகாரில் போடி தாலுகா போலீசார் நாராயணனை கைது செய்தனர்.

