/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காஸ் சிலிண்டரால் அடித்து மனைவி கொலை: கணவன் கைது
/
காஸ் சிலிண்டரால் அடித்து மனைவி கொலை: கணவன் கைது
ADDED : நவ 25, 2025 05:44 AM
திருவனந்தபுரம், நவ. 25 - தகராறில் காஸ் சிலிண்டரால் அடித்து மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே கிழிக்கொல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன் 54. முந்திரி வியாபார புரோக்கர். மனைவி கவிதா 46. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அடிக்கடி குடிபோதையில் மனைவியை அடித்து உதைப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் போதையில் வந்த மதுசூதனன், மனைவியிடம் தகராறு செய்து அவரை கடுமையாக தாக்கி உள்ளார். பின்னர் வீட்டிலிருந்த காஸ் சிலிண்டரை எடுத்து கவிதாவை தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்து இறந்தார்.
இதை பார்த்த குழந்தைகள் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்து பக்கத்து வீடுகளில் தெரிவித்தனர். கவிதா உடலை மீட்ட கிளிக்கொல்லுார் போலீசார் மதுசூதனனை கைது செய்தனர்.

