/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
/
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
ADDED : ஜன 08, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவாரம் : தேவாரம் அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுருளிராஜ் 50. இவரது மனைவி முனியம்மாள் 40. கணவன் தினமும் குடித்து விட்டு மனைவியை அடித்து துன்புறுத்தினார்.
இதனால் மனைவி கோபித்து கொண்டு இதே பகுதியில் வசிக்கும் தனது தாய் முத்துலட்சுமி வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முனியம்மாள், முத்துலட்சுமி இருவரும் மேட்டுப்பட்டி பஸ் ஸ்டாப்பில் உட்கார்ந்து இருந்தனர்.
அப்போது அங்கு சென்ற கணவர், குடித்து விட்டு மனைவியை தகாத வார்த்தையால் பேசியும், அரிவாளால் வெட்டி காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். தேவாரம் போலீசார் கணவரை கைது செய்தனர்.