/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரதட்சணை கேட்டு மனைவியை மிரட்டிய கணவர் கைது
/
வரதட்சணை கேட்டு மனைவியை மிரட்டிய கணவர் கைது
ADDED : ஜூலை 29, 2025 01:11 AM
ஆண்டிபட்டி: புள்ளிமான்கோம்பை அருகே புதூரைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி 28, இவருக்கு திருமணம் முடிந்து 11 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
தனது கணவர் இறந்தபின் 13.9.2023ல் ராஜயோக்கியம் என்பவரை ஊர் பெரியவர்கள் முன்னிலையில் 2வது திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் போது ஸ்ரீ தேவிக்கு 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஸ்ரீதேவி தனது கணவருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளார்.
ஸ்ரீதேவி 2ம் திருமணம் செய்ததால், கணவர் மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் வரதட்சணையாக கொண்டுவந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.20 லட்சம் பணத்தையும் வாங்கிக் கொண்டு தர மறுத்துள்ளனர்.
மேலும் குடிபோதையில் அடிக்கடி கணவர் ராஜயோக்கியம் தனது மனைவியை அசிங்கமாக பேசியும், கணவர் 2வது திருமணம் செய்யப் போவதாக மிரட்டியும் வந்துள்ளார்.
தனது நகை, பணத்தை திருப்பி தருமாறு ஸ்ரீதேவி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஸ்ரீதேவி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து ராஜாயோக்கியத்தை கைது செய்தனர். அவரது தந்தை தங்கம், தாய் பூங்கொடி, தங்கைகள் ராஜலட்சுமி, ராஜேஸ்வரி, தம்பி மகேந்திரன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.