ADDED : அக் 25, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: கோம்பை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி 32, மனைவி சுகத்தி 25. இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தான் திருமணம் நடந்துள்ளது. ஒரு மகன் உள்ளார்.
டிராக்டர் டிரைவராக வேலை செய்த ராமமுர்த்தி நேற்று முன்தினம் தனது மனைவி யுடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்துள்ளார். ராமமூர்த்தி நள்ளிரவில் அலறிய மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த மனைவி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து, கணவரை உத்தமபாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கிருந்த டாக்டர் பரிசோதித்து விட்டு ராமமூர்த்தியை ஏற்கெனவே இறந்து விட்டார் என கூறியுள்ளார். கோம்பை போலீசார் விசாரிக்கின்றனர்.

