/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குறைப்பு ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் 30 சதவீதம் நிதி குறைவால் நோய் தடுப்பு நடவடிக்கையில் சுணக்கம்
/
குறைப்பு ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் 30 சதவீதம் நிதி குறைவால் நோய் தடுப்பு நடவடிக்கையில் சுணக்கம்
குறைப்பு ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் 30 சதவீதம் நிதி குறைவால் நோய் தடுப்பு நடவடிக்கையில் சுணக்கம்
குறைப்பு ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் 30 சதவீதம் நிதி குறைவால் நோய் தடுப்பு நடவடிக்கையில் சுணக்கம்
ADDED : அக் 25, 2025 04:51 AM
பெரியகுளம்: ஊராட்சிகளுக்கான மாநில நிதிக்குழு மானிய நிதியை 30 சதவீதம் குறைத்து வழங்குவதால் கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள முடியாமல் நிர்வாகம் திணறுகின்றன. வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் போதிய நிதியின்றி ஊராட்சிகளில் நோய்தடுப்பு பணிகளில் சுணக்கம் நிலவுகிறது.
மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி, போடி, உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கடமலை -மயிலை ஆகிய 8 ஒன்றியங்களில் 130 ஊராட்சிகள் உள்ளன. ஜன., 5 முதல் உள்ளாட்சிபிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைந்ததை முன்னிட்டு தனி அலுவலர்கள் மற்றும் பி.டி.ஓ.,க்கள், மண்டல துணை பி.டி.ஓ.,க்கள், செயலாளர்கள் மூலம் ஊராட்சிகள் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் வலியுறுத்தும் அடிப்படையான அத்தியாவசியமான கோரிக்கைகளை நிறைவேற்றிட பல ஊராட்சிகளில் போதிய நிதி ஆதாரம் இன்றி உள்ளன. இதனால் ஊராட்சிகளில் தேங்கிய குப்பை அகற்றுவதற்கும், கழிவுநீர் கடத்துவதற்கும் , தெருவிளக்குகள் எரிய வைக்க முடியாமல் நிர்வாகம் சுணக்கத்தில் உள்ளன.
நிதி குறைப்பால் பணி பாதிப்பு: ஊராட்சிகளில் அடிப்படை தேவைகள் நிறைவேற்ற மக்கள் தொகைக்கு ஏற்ப மாநில நிதி குழு மானிய நிதி மாதம்தோறும் வழங்கப்படுகிறது. ஊராட்சி தலைவர்கள் பொறுப்பில் இருந்த கால கட்டங்களில் மாநில நிதி குழு நிதி கூடுதலாக வழங்கப்பட்டது. தற்போது இந்த நிதி 30 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டது. உதாரணத்திற்கு ஒரு ஊராட்சிக்கு ரூ.2 லட்சம் கிடைத்த நிதி தற்போது ரூ.1.30 லட்சமாக குறைத்து வழங்கப்படுகிறது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் தொடர்மழை காலமாகும். இந்த காலங்களில் ஊராட்சிகளில் துாய்மை பணி விறுவிறுப்பாக நடத்திட வேண்டும். தெருக்களில் கழிவு நீர் தேங்காமல் சுத்தம் செய்தால் குப்பை அகற்றுதல், கிருமிநாசினி பிளிசிங் பவுடர் தெளித்தல், கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளுதல் மாநில நிதியில் இருந்து தான் செயல்படுத்த வேண்டும். இச் சூழலில் 30சதவீத நிதி குறைப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மானிய நிதி குறைக்காமல் வழங்க ஊராட்சி செயலர்கள், தனி அலுவலர்கள் வலியுறுத்தி உளளனர்.
ஊராட்சிகளில் குழு அமைக்க வேண்டும் பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகள், பேரிடர்களை சரி செய்ய ஒன்றிய அளவில் பி.டி.ஓ., தலைமையில் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு ஊராட்சிகள் அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும். அப்போதுதான் கிராமங்கள், உட்கடை கிராமங்களில் மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பு கண்டறிந்து உடனே தடுப்பு மற்றும் சீரமைப்பு பணி மேற்கொள்ள முடியும். இக் குழு முழுவீச்சில் செயல்பட்டதால்தான் தொற்று நோய்கள் பரவுவது தடுக்கப்படும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
--

