ADDED : ஏப் 08, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: திண்டுக்கல் பேகம்பூர் அருகே பூச்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி 60. இவரது மனைவி ரேணுகா 56. பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியில் ரேணுகாவின் பெற்றோர் ஊரில் திருவிழாவிற்கு இருவரும் வந்தனர்.
இரு நாட்களுக்கு பிறகு கந்தசாமி ஊருக்கு செல்ல வேண்டும் என ரேணுகாவிடம் கூறியுள்ளார்.தேவதானப்பட்டி பஸ்ஸ்டாப்பிலிருந்து ரேணுகா, கந்தசாமியை திண்டுக்கல்லிற்கு அரசு பஸ்சில்அனுப்பியுள்ளார். இந்நிலையில் கந்தசாமி ஊருக்கு வரவில்லை என தகவல் வந்துள்ளது. மனைவி புகாரில் தேவதானப்பட்டி போலீசார் கந்தசாமியை தேடுகின்றனர்.--