/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பூச்சி கடித்த காய்கறிகளை சமையலுக்கு வாங்குகிறேன் கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு
/
பூச்சி கடித்த காய்கறிகளை சமையலுக்கு வாங்குகிறேன் கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு
பூச்சி கடித்த காய்கறிகளை சமையலுக்கு வாங்குகிறேன் கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு
பூச்சி கடித்த காய்கறிகளை சமையலுக்கு வாங்குகிறேன் கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு
ADDED : நவ 07, 2024 02:16 AM
பெரியகுளம்: 'பூச்சி கடித்த நல்ல காய்கறிகளை சமையலுக்கு வாங்குவதாக', கலெக்டர் ஷஜீவனா தோட்டக்கலை கல்லுாரி கருத்தங்கில் பேசினார்.
பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் அங்கக வேளாண்மையில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமையில் நடந்தது. தோட்டக்கலை துணை இயக்குனர்நிர்மலா, வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ், தொழில் முனைவோர் செயல் அலுவலர் வசந்தன் முன்னிலை வகித்தார்.
நூலை கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டு பேசுகையில்:
தமிழக அரசு சிறந்த இயற்கை உர சாகுபடி விவசாயிகளுக்கு விருது வழங்கி வருகிறது.
இதில் தேனி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
வரும் காலங்களில் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். விவசாயிகள் விளை பொருட்களை உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல் விற்பனையாளராக மாற வேண்டும்.
உழவர் சந்தையில் விவசாயிகள் விற்பனையாளர்களாக மாறுவதை போல் செயல்பட வேண்டும்.
விவசாயி ஒரு இளநீரை ரூ.20 க்கு விற்பனை செய்கிறார்.அதனை கடையில் ரூ.40 க்கு வாங்குகிறோம். இயற்கை உரங்களில் விளையும் இளநீர் சென்னையில் ரூ.100 க்கு விற்கப்படுகிறது. கோவை விவசாயி ஒருவர் பூச்சி கடித்த நல்ல காய்கறிகளை தனக்கு வைத்துக் கொள்வதாக கூறினார்.
இதனை பின்பற்றி நானும் பூச்சி கடித்த காய்கறிகளை மட்டும் சமையலுக்கு வாங்குகிறேன் என்றார்.
இயற்கை உரங்கள், காய்கறிகள், பழங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டது.
பேராசிரியைகள் செண்பகவள்ளி, சுகன்யா கண்ணா, தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜாஸ்மின் நன்றி கூறினார். விவசாயிகள் பங்கேற்றனர்.