/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒரே டிக்கெட்டில் சுற்றுலா பகுதிகளை பார்க்க ஏற்பாடு இடுக்கி கலெக்டர் தகவல்
/
ஒரே டிக்கெட்டில் சுற்றுலா பகுதிகளை பார்க்க ஏற்பாடு இடுக்கி கலெக்டர் தகவல்
ஒரே டிக்கெட்டில் சுற்றுலா பகுதிகளை பார்க்க ஏற்பாடு இடுக்கி கலெக்டர் தகவல்
ஒரே டிக்கெட்டில் சுற்றுலா பகுதிகளை பார்க்க ஏற்பாடு இடுக்கி கலெக்டர் தகவல்
ADDED : ஆக 09, 2025 03:58 AM

மூணாறு: ''சுற்றுலாத் துறைக்கு சொந்தமான சுற்றுலா மையங்களை ஒரே டிக்கெட்டில் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.'' என, இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி தெரிவித்தார்.
மூணாறி ல் அரசு தாவரவியல் பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை கலெக்டர் விக்னேஸ்வரி துவக்கி வைத்தார். குறிப்பாக சுற்றுலா பகுதிகளில் போட்டோ எடுக்கும் போட்டோ கிராபர்களுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் 'இடுக்கி கிளிக்' எனும் திட்டத்தில் கப்புகள், சாவி செயின், டீ சர்ட் ஆகியவற்றில் போட்டோக்களை அச்சிடுவது உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதனை துவக்கி வைத்தவர், மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் 'லோகோ'வை வெளியிட்டார். தேவிகுளம் முன் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் சுற்றுலாப் பகுதிகள் குறித்து 'பாக்கெட் கைடு' தயாரித்தார்.
முதல் கட்டமாக மூணாறு, மாங்குளம் வழித்தடத்தில் உள்ள சுற்றுலாப் பகுதிகளை குறித்து கைடு தயாரிக்கப்பட்டது. அதில் உள்ள ' க்யூ.ஆர்.' கோடு மூலம் சுற்றுலாப் பகுதிகளை எளிதில் அறியலாம். அதனையும் கலெக்டர் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: 'இடுக்கி எலக்ட்ரா' என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள், தொழில், வேளாண் ஆகிய துறைகள் ஆகியோர் சார்பிலான உணவு, கைவினைப் பொருட்கள் உட்பட தயாரிப்புகளை மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு சுற்றுலா மையங்களில் ஞாயிறு தோறும் காட்சிப் படுத்தி, விற்பனை செய்ய வசதி செய்யப்படும்.
அதே போல் மாவட்டச் சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் 'ஆன் லைன்' மூலம் பெறப்படும் ஒரே டிக்கெட்டில், அத்துறைக்கு சொந்தமான அனைத்து சுற்றுலா பகுதிகளையும் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன., என்றார். தேவிகுளம் சப் கலெக்டர் ஆர்யா, முன் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.