sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இடுக்கி லோக்சபா தொகுதி முன்னோட்டம்: தேர்தல் பணிகளை துவக்கிய முன்னணி கட்சிகள்

/

இடுக்கி லோக்சபா தொகுதி முன்னோட்டம்: தேர்தல் பணிகளை துவக்கிய முன்னணி கட்சிகள்

இடுக்கி லோக்சபா தொகுதி முன்னோட்டம்: தேர்தல் பணிகளை துவக்கிய முன்னணி கட்சிகள்

இடுக்கி லோக்சபா தொகுதி முன்னோட்டம்: தேர்தல் பணிகளை துவக்கிய முன்னணி கட்சிகள்


ADDED : மார் 12, 2024 06:09 AM

Google News

ADDED : மார் 12, 2024 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : கேரளாவில் இரண்டு மாவட்டங்களில் ஏழு சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய லோக்சபா தொகுதி இடுக்கி. எர்ணாகுளம் மாவட்டத்தில் மூவாற்று புழா, கோதமங்கலம், இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன்சோலை, இடுக்கி, பீ ர்மேடு, தொடுபுழா என ஏழு சட்டசபை தொகுதிகளை கொண்டது. தொடுழா, மூவாற்றுபுழா ஆகிய தொகுதிகள் மட்டும் காங்கிரஸ் கூட்டணி வசமும், எஞ்சிய ஐந்து தொகுதிகள் இடது சாரி கூட்டணி வசமும் உள்ளன.

இடுக்கி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் 'சிட்டிங்' எம்.பி., டீன் குரியாகோஸ், இடது சாரி கூட்டணி சார்பில் ஜாய்ஸ் ஜார்ஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இருவரும் தொடர்ந்து மூன்றாவது முறை நேரடியாக மோதுகின்றனர்.

இடுக்கி மாவட்டத்தில் நிலம் தொடர்பான காட்கில், கஸ்தூரிரங்கன் ஆகியோரின் அறிக்கையை எதிர்கொள்ள கிறிஸ்தவ அமைப்புகளால்' ஹைரேஞ் பாதுகாப்பு குழு' உருவாக்கி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அந்த அமைப்புக்கு சட்ட ஆலோசகராக இருந்த வக்கீல் ஜாய்ஸ் ஜார்ஜ் அந்த அமைப்பு சார்பில் இடது சாரி கூட்டணியின் ஆதரவுடன் 2014ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட டீன்குரியாகோஸை விட 50,542 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 2019ல் நடை பெற்ற தேர்தலில் இருவரும் போட்டியிட்டனர். அப்போது நிலைமை தலைகீழாக மாறியது. டீன்குரியாகோஸ், ஜாய்ஸ்ஜார்ஜை 1,71,053 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தற்போது இடது சாரி கூட்டணி சார்பில் ஜாய்ஸ்ஜார்ஜ் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் பணிகளை துவக்கி விட்டார்.

கட்டப்பனையில் மார்ச் 7ல் இடதுசாரி கூட்டணி சார்பில் தேர்தல் கூட்டம் நடந்த நிலையில் தொகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு சுவர் எழுத்துகள் எழுதப்பட்டு வருகின்றன.

அதுபோன்று காங்கிரஸ் கட்சியினரும் டீன்குரியாகோஸ்க்கு ஆதரவாக தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியும், போர்டுகள் வைத்தும் தேர்தல் பணியை துவக்கினர். பா.ஜ., கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்பதால், அந்த கூட்டணியினர் தேர்தல் பணிகளை துவக்கவில்லை.

காங் ., கோ ட்டை


இடுக்கி லோக்சபா தொகுதி உருவாக்கப்பட்டு 1977ல் முதன் முறையாக தேர்தல் நடந்தது. இதுவரை 12 முறை தேர்தல் நடந்த நிலையில் காங்., கூட்டணி 8 முறையும், இடது சாரி கூட்டணி 4 முறையும் வெற்றி பெற்றன. அதனால் தொகுதி காங்., கோட்டையாக கருதப்படுகிறது.

1977ல் காங்., வேட்பாளர் ஸ்டீபன் வெற்றி பெற்றார். 1980ல் இடது சாரி கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூ., சேர்ந்த லாரன்ஸ் வெற்றி பெற்றார். 1984ல் காங்., கூட்டணியில் பி.ஜே. ஜோசப் வெற்றி பெற்றார். 1989ல் காங்., கூட்டணியில் பாலா கே.எம். மாத்யூ வெற்றி பெற்றார்.

1991ல் காங்., கூட்டணிய 1998ல் காங்., கூட்டணியில் சாக்கோ வெற்றி பெற்றார். 1999ல் இடது சாரி கூட்டணியில் பிரான்சிஸ்ஜார்ஜ் வெற்றி பெற்றார்.

2004ல் இடதுசாரி கூட்டணியில் பிரான்சிஸ்ஜார்ஜ் மீண்டும் வெற்றி பெற்றார். 2009ல் காங்., கூட்டணியில் பி.டி. தாமஸ் வெற்றி பெற்றார்.

2014ல் இடது சாரி கூட்டணியகங் 'ஹைரேஞ் பாதுகாப்பு குழு' சார்பில் போட்டியிட்ட ஜாய்ஸ்ஜார்ஜ் வெற்றி பெற்றார்.

2019ல் காங்., கூட்டணியைச் சேர்ந்த டீன்குரியாகோஸ் 1, 71, 053 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.






      Dinamalar
      Follow us