/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பத்தில் கொசுக் கடியால் அவதி: மருத்து தெளிப்பதில் சுணக்கம்
/
கம்பத்தில் கொசுக் கடியால் அவதி: மருத்து தெளிப்பதில் சுணக்கம்
கம்பத்தில் கொசுக் கடியால் அவதி: மருத்து தெளிப்பதில் சுணக்கம்
கம்பத்தில் கொசுக் கடியால் அவதி: மருத்து தெளிப்பதில் சுணக்கம்
ADDED : ஆக 31, 2025 04:14 AM
கம்பம்: கம்பத்தில் கொசு மருந்து தெளிப்பதில் சுணக்கம் நிலவுவதால், கொசு கடியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கம்பம் நகராட்சியில் காந்தி நகர், சி.எம்.எஸ்.நகர், நந்தகோபாலசாமி நகர், காளவாசல், பாரதியார் நகர், தாத்தப்பன்குளம் என நகரின் அனைத்து பகுதிகளிலும் கொசு தொல்லை அதிகளவில் உள்ளது. இதில் குறிப்பாக
தினகரன் காலனி, சீப்பர் காலனி பகுதிகளில் கொசு தொல்லை மிக அதிகம். ஆனால் நகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் சுணக்கம் நிலவுகிறது. நகராட்சியில் கொசு மருந்துகள் வாங்க பணம் லட்சக்கணக்கில் நகராட்சி கூட்டத்தில் அனுமதி வாங்கப்படுகிறது. கொசு மருந்து தெளிப்பு இயந்திரங்கள் என்ன நிலையில் உள்ளது என்பதும் தெரியவில்லை. நகர் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் பரவலாக நகர் முழுவதும் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. கமிஷனர் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.