/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என புகார்
/
கம்பம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என புகார்
கம்பம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என புகார்
கம்பம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என புகார்
ADDED : அக் 18, 2024 05:57 AM
கம்பம்: கம்பம் நகராட்சி கூட்டத்தில்அ.தி.மு.க., வார்டுகளில் வளர்ச்சி பணி நடைபெறவில்லை என கூறி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆறுபேர் வெளிநடப்பு செய்தனர்.
கம்பம் நகராட்சி கூட்டம் தலைவர் வனிதா (தி.மு.க.,) தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் பார்கவி, பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் பேசியதாவது:
கூட்டத்தில் , பழுதடைந்த 9 அங்கன்வாடி கட்டடங்களை பராமரிப்பு பணி செய்ய ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்தது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் ஒப்புதலுக்கு வந்தது.
முருகன் (அ.தி.மு.க.,): அ.தி.மு.க. கவுன்சிலர் வார்டுகளில் எந்த வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை. ரூ.30 ஆயிரத்தில் சிறு பாலம் கட்ட அனுமதி இல்லை. பிளாஸ்டிக் தொட்டி அமைக்க கூறினேன். ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால் அலுவலக பணிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் எங்கிருந்து வருகிறது.
தலைவர் : நகராட்சியில் நிதி இருப்பு குறைவாக உள்ளது. நிதி ஒதுக்கீடு வந்தவுடன் செய்யப்படும்.
முருகன் : நிதி ஒதுக்கீடுகள் எப்போது வரும்
சாதிக் ( தி.மு.க ) : கடந்த 3 ஆண்டுகளில் வளர்ச்சி பணிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு பணி, சாலைப் பணிகள் என செயல்படுத்தப்பட்டுள்ளது.முருகன் ( அ.தி.மு.க.) நான் தலைவரிடமும், அதிகாரிகளிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஏன் பதில் சொல்கிறீர்கள் எனக் கூறி அ.தி.மு. க. கவுன்சிலர்கள் 6 பேர்
கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம் தலைவர் கூறுகையில், அ.தி.மு.க. கவுன்சிலர்களின் வார்டுகளில் ரூ.5 கோடி வரை வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. அ.தி.மு.க. என பாரபட்சம் காட்டவில்லை. எல்லா வார்டுகளிலும் ஒரு மாதிரி நிதி ஒதுக்கீடுகள் செய்துள்ளேன். குற்றச்சாட்டு கூற வேண்டும் என்பதற்காக அரசியல் உள்நோக்கத்துடன் கூட்டத்தை விட்டு வெளியேறினார்கள் என்றார்.