/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் அரசு மருத்துவமனையில் நவீன சமையற்கூடம் திறப்பு
/
கம்பம் அரசு மருத்துவமனையில் நவீன சமையற்கூடம் திறப்பு
கம்பம் அரசு மருத்துவமனையில் நவீன சமையற்கூடம் திறப்பு
கம்பம் அரசு மருத்துவமனையில் நவீன சமையற்கூடம் திறப்பு
ADDED : டிச 26, 2024 05:33 AM
கம்பம்: கம்பம் அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு 200 க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. ரூ.10 கோடி மதிப்பீட்டில் பிரசவ மேம்பாட்டு பிரிவு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே இருந்த சமையற் கூடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், புதிய சமையற் கூடம் அமைக்க கோரிக்கை எழுந்தது. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.25 லட்சத்தில் நவீன சமையல் கூடம் கட்டப்பட்டது.
புதிய சமையற் கூடத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். டாக்டர் பொன்னரசன், தி.மு.க.,கொள்கைபரப்பு மாநில துணை செயலாளர் பாண்டியன், நகர செயலாளர்கள் வீரபாண்டியன், பால்பாண்டிராஜா, கவுன்சிலர் குருகுமரன் கலந்து கொண்டனர்.