ADDED : ஜன 18, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அருகே நாகலாபுரத்தில் திருவள்ளுவர் சிலை, திருக்குறள் தகவல் பலகை திறப்பு விழா நடந்தது.
தமிழ்வளர்ச்சித்துறை முன்னாள் துணை இயக்குனர் சந்திரா, உதவி இயக்குனர் இளங்கோ பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றம், தேனி வையைத் தமிழ்சங்க நிறுவனர் இளங்குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது. சில மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை மரக்கிளைகளை அகற்றிய போது திருவள்ளுவர் சிலை சேதமடைந்தது. இதனை தொடர்ந்து அந்த இடத்தில் புதிய சிலை நிறுவி திருக்குறள் பலகை நிறுவப்பட்டுள்ளது.