/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையில் தொடரும் மழை ஒரே நாளில் நீர்மட்டம் ஒரு அடி உயர்வு
/
பெரியாறு அணையில் தொடரும் மழை ஒரே நாளில் நீர்மட்டம் ஒரு அடி உயர்வு
பெரியாறு அணையில் தொடரும் மழை ஒரே நாளில் நீர்மட்டம் ஒரு அடி உயர்வு
பெரியாறு அணையில் தொடரும் மழை ஒரே நாளில் நீர்மட்டம் ஒரு அடி உயர்வு
ADDED : நவ 04, 2024 03:56 AM
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் தொடரும் மழையால் நேற்று ஒரே நாளில் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 124.30 அடியை எட்டியது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக பெரியாறில் 75.2 மி.மீ., மழை பதிவானது. இந்நிலையில் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 72.8 மி.மீ., தேக்கடியில் 60.மி.மீ., மழை பெய்தது. இதனால் அணைக்கு 1339 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 3401 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 124.30 அடியை எட்டியது (மொத்த உயரம் 152 அடி). அணையில் நீர் இருப்பு 3479 மில்லியன் கன அடியாகும். தமிழகப் பகுதிக்கு 1100 கன அடி திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் 2ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சிக்கல் நீங்கியது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்றும் மழை தொடரும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் உயரும்.