/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடர் மழையால் நெல் அறுவடை பாதிப்பு
/
தொடர் மழையால் நெல் அறுவடை பாதிப்பு
ADDED : அக் 15, 2024 05:41 AM

கூடலுார்: கூடலுாரில் தொடர் மழையால் முதல் போக நெல் அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கூடலுார் பகுதியில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒழுகுபுளி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை முடிந்துள்ளது.
கூடலுார், காஞ்சிமரத்துறை, ஒட்டான்குளம், தாமரைக்குளம், வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அரசு நெல் கொள்முதல் செய்வதில் ஈரப்பதம் 17 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக உயர்த்த விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வராததால் மழைக்காலங்களில் நெல் அறுவடை செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டியுள்ளனர்.
கூடுதல் மழை பெய்யும் போது நெற்கதிர்கள் சாய்ந்து பாதிக்கும் அபாயம் உள்ளது.