/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் சிறார் திருமணங்கள் 90 சதவீதம் அதிகரிப்பு: விதி மீறிய 26 குடும்பத்தினர் போக்சோவில் கைது
/
மாவட்டத்தில் சிறார் திருமணங்கள் 90 சதவீதம் அதிகரிப்பு: விதி மீறிய 26 குடும்பத்தினர் போக்சோவில் கைது
மாவட்டத்தில் சிறார் திருமணங்கள் 90 சதவீதம் அதிகரிப்பு: விதி மீறிய 26 குடும்பத்தினர் போக்சோவில் கைது
மாவட்டத்தில் சிறார் திருமணங்கள் 90 சதவீதம் அதிகரிப்பு: விதி மீறிய 26 குடும்பத்தினர் போக்சோவில் கைது
ADDED : ஏப் 29, 2025 05:48 AM

தேனி: மாவட்டத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களில் உள்ள இளம் சிறுமிகள் திருமணங்களால் கருவுறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விதிமீறிய 26 குடும்பத்தினர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்ணின் திருமண வயது 21 என அரசு நிர்ணயித்துள்ளது. அதற்கு குறைவான வயதுடைய சிறுமிகளை திருமணம் செய்வது குற்றமாகும். இளம் வயது திருமணங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் தேனி மாவட்டத்தில் சமீபமாகி இளம் வயது திருமணங்கள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கடந்தாண்டு சிறார் திருமணங்களின் எண்ணிக்கை 122 என்ற நிலையில் இருந்தது. அது நடப்பாண்டில் 900 ஆக உயர்ந்து 90 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை சுகாதாரத்துறையின் தாய் , சேய் நலப்பிரிவின் மூலம் கண்டறிந்த சமூக நலத்துறை, கருவுற்ற சிறுமிகளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தீவிர கண்காணிப்பிற்கு உத்தரவிட்டுள்ளது.
எட்டு வட்டாரங்களில் உள்ள  தாய், சேய் நலப்பணியாளர்கள், கிராம செவிலியர்கள் மூலமும், குழந்தைகள் நல பாதுகாப்புக்குழு களப்பணியாளர்கள்  ஆய்வு செய்தனர்.  இதில் இளம் வயது சிறுமிகள் கருவூறுவதால் உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்து நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து  உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஆரோக்கியமான குழந்தையை பிரசவிப்பதில் பிரச்னைகள் ஏற்படுகிறது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களில் உள்ள 26 சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் குடும்பத்தினர், கணவர் குடும்பத்தினர்   மீதும் போக்சோ வழக்குப்பதிந்து, கைது செய்ய   சமூகநலத்துறை போலீசாருக்கு பரிந்துரை செய்தது. இதன்பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதித்து கைது செய்துள்ளனர்.
எஸ்.பி., சிவபிரசாத் கூறியதாவத,' கலெக்டர், சமூகநலத்துறை அதிகாரிகள் ஆலோசனையில்   சிறுமிகளின் உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலும், வருங்கால இளைய சமுதாயம் ஆரோக்கியமாக பிறந்து வளர வேண்டும்  என்பதற்காகவும் சிறார் திருமணம் முடித்தவர்கள் மீது போக்சோ  சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.  இது ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக எடுத்து வருகிறோம்,' என்றார்.

