sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போதைப்பொருட்கள் பயன்படுத்தும் மாணவர்கள் ..அதிகரிப்பு: 'ஹெல்த் அம்பாசிடர்' மூலம் விழிப்புணர்வு தேவை

/

போதைப்பொருட்கள் பயன்படுத்தும் மாணவர்கள் ..அதிகரிப்பு: 'ஹெல்த் அம்பாசிடர்' மூலம் விழிப்புணர்வு தேவை

போதைப்பொருட்கள் பயன்படுத்தும் மாணவர்கள் ..அதிகரிப்பு: 'ஹெல்த் அம்பாசிடர்' மூலம் விழிப்புணர்வு தேவை

போதைப்பொருட்கள் பயன்படுத்தும் மாணவர்கள் ..அதிகரிப்பு: 'ஹெல்த் அம்பாசிடர்' மூலம் விழிப்புணர்வு தேவை


ADDED : செப் 20, 2025 04:37 AM

Google News

ADDED : செப் 20, 2025 04:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி, கல்லுாரி பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை மறைமுகமாக நடக்கிறது. கடந்த மாதம் கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், பெரியகுளம் பகுதிகளில் இரு பெண்கள் உட்பட சில்லரை கஞ்சா வியாபாரிகள் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். பள்ளி, கல்லுாரி பகுதி அருகே கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், 'கஞ்சா பொட்டலங்கள் ரூ. 75 முதல் ரூ.100க்கு விற்பனை செய்வதாகவும், மாணவர்கள் தான் பேரம் பேசாமல் வாங்கக்கூடிய வாடிக்கையாளர்கள்,' என அதிர்ச்சியான தகவலை தெரிவித்தனர்.

பிஞ்சு மனதில் நஞ்சு கலப்பதற்கு நிகராக சில ஆண்டுகளுக்கு முன் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் மது குடித்துவிட்டு ஆசிரியர்களை ஒருமையில் பேசி மிரட்டினார். அதே மாணவர் தற்போது இளைஞராகி கொலைவழக்கில் சிறையில் உள்ளார்.

இப்பள்ளி மாணவர்கள் சிலருக்கு டாக்டர் மூலம் மனநலம் குறித்து கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. ஆனாலும் இப் பள்ளியின் எதிரே சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பை மீறி தனியார் மதுக்கடை செயல்படுகிறது.

மாவட்ட மனநல மருத்துவர் ராஜேஷ் கூறியதாவது: போதை பொருட்களால் மாணவர்கள் உடல்நலம், மனநலம் கெடுவதுடன் மனநோய்க்கு ஆளாகின்றனர். மாநில மருத்துவ அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம் முயற்சியால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லூரி, பள்ளிகளில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் தன்னார்வலர்களை உள்ளடக்கிய 'ஹெல்த் அம்பாசிட்டர்' அமைப்பின் மூலம் 'சுகாதாரம்,ஆரோக்கியம்' தூதர்களாக பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஓரிருவர் நியமிக்கப்படுகின்றனர்.

இவர்கள் மாதம் இரண்டு அல்லது மூன்றுமுறை கல்லூரிகள், பள்ளிகளில் போதை தடுப்பு குறித்து பாடம் நடத்துகின்றனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இவர்கள் மூலம் மாவட்ட மனநல மருத்துவர் மூலம் போதை தடுப்பு விழிப்புணர்வு பாடம் எடுக்கின்றனர். இதில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இதே போல் தேனி மாவட்டத்தில் 'ஹெல்த் அம்பாசிடர்' திட்டம் உருவாக்க வேண் டும் என்றார்.






      Dinamalar
      Follow us