/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செம்மண்ணார் -கேப் ரோட்டில் விபத்துகள் அதிகரிப்பு
/
செம்மண்ணார் -கேப் ரோட்டில் விபத்துகள் அதிகரிப்பு
ADDED : ஆக 03, 2025 04:04 AM

மூணாறு : மூணாறுக்கு சுற்றுலா வரும் பயணிகள் கேப்ரோடு வழியாக பைசன்வாலிக்கு செல்ல செம்மண்ணார், கேப்ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர். அந்த ரோடு 2022ல் சீரமைக்கப்பட்டது.
இந்த ரோட்டில் கேப்ரோடு முதல் காக்காகடை வரையிலான 7 கி.மீ., தூரம் கடும் இறக்கமாவும், ஆபத்தான வளைவுகளை கொண்டதாகவும் உள்ளது. அதனால் அனுபவம் இல்லாத டிரைவர்கள் ஓட்டும் வாகனங்கள், டூவீலர்கள் ஆகியவை அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றன. குறிப்பாக சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகம் விபத்துகளில் சிக்குகின்றன. தற்போது வரை 40க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு 11 பேர் பலியாகினர்.
சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கார் விபத்தில் சிக்கியது. இறக்கத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்த நான்கு பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

