/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காய்ச்சல், சளி பாதிப்பு அதிகரிப்பு மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு

ADDED : நவ 25, 2025 01:28 AM
கம்பம்: சீதோஷ்ண நிலை மாறி வருவதால் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு ஏற்படுவதால் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. பனிக்காலம் என்பதால், பனியும், மழையும் மாறி மாறி நிலவுவதால் காய்ச்சல் பரவி வருகிறது. பனிப் பொழிவு ஆரம்பித்த நிலையில், மழை பெய்ததால் காய்ச்சல் பரவியது. தற்போது காய்ச்சலுடன், இருமல், சளி என பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சலுடன் சளி,இருமல் அதிகரித்துள்ளது. ஒரு சிலருக்கு தொடர் இருமல் உள்ளது. சளி, இருமல் காரணமாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சளி, இருமலை கட்டுப்படுத்தும் மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது பற்றி மருந்தாளுனர்கள் கூறியதாவது: சளி இருமல் பாதிப்பு உள்ளோர் அதிகமாகரிப்பால் மருந்து மாத்திரைகள் இருப்பு குறைந்து வருகிறது. எழுதி கேட்டுள்ளோம். விரைவில் கொள்முதலுக்கு அனுமதி கிடைக்கும். கையிருப்பில் உள்ள மருந்து மாத்திரைகளை வைத்து சமாளித்து வருகிறோம் என்றனர்.