/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுாரில் தடையை மீறி பட்டாசு வெடிப்பு அதிகரிப்பு
/
கூடலுாரில் தடையை மீறி பட்டாசு வெடிப்பு அதிகரிப்பு
ADDED : செப் 11, 2025 07:05 AM
கூடலுார் : கூடலுாரில் தடையை மீறி மீண்டும் பட்டாசு வெடிப்பது அதிகரித்துள்ளது.
காற்று மாசுபடுவதை தவிர்க்க பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன்பு கூடலுாரில் மக்கள் மன்றம், தன்னார்வ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
அதன் அடிப்படையில் அப்போதைய நகராட்சி நிர்வாகம் பட்டாசு வெடிக்க தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியது.
பொது இடங்கள், அனைத்து திருமண மண்டபங்களிலும் பட்டாசு வெடிக்கக் கூடாது என எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், தடையை மீறி திருமணம், காதணி விழா, அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பொது இடங்களில் பட்டாசு வெடிப்பது அதிகரித்தது.
இதனால் முதியவர்கள், இதய நோய் உள்ளவர்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பொது இடங்களில் பட்டாசு வெடிப்பவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து எச்சரித்து வந்தது.
இந்நிலையில் தற்போது பொது இடங்களை தவிர்த்து விசேஷம் நடைபெறும் வீடுகளுக்கு முன்பும், தெருக்களிலும் தடையை மீறி, மீண்டும் பட்டாசு வெடித்து வருகின்றனர்.
தெருக்களில் பேப்பர் குவியல்கள் அதிகரித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.