/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோடையில் குடிநீர் தேவை அதிகரிப்பு ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தல்
/
கோடையில் குடிநீர் தேவை அதிகரிப்பு ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தல்
கோடையில் குடிநீர் தேவை அதிகரிப்பு ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தல்
கோடையில் குடிநீர் தேவை அதிகரிப்பு ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தல்
ADDED : மார் 02, 2024 04:35 AM
ஆண்டிபட்டி : கோடையில் குடிநீர் தேவை அதிகரிப்பதால் குடிநீர் வாரியம் ஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும் என்று டி.சுப்புலாபுரம் ஊராட்சி நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஊராட்சிக்குட்பட்ட டி.சுப்புலாபுரம், அணைக்கரைப்பட்டி, டி.புதூர், பெருமாள்பட்டி ஆகிய கிராமங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். ஆண்டிபட்டி - சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் விநியோகம் உள்ளது. 2011 மக்கள்தொகை அடிப்படையில் தினமும் 1.60 லட்சம் லிட்டர் ஒதுக்கப்படுகிறது.
குடிநீர் வாரியம் கடந்த பல ஆண்டுக்கு முன் நிர்ணயம் செய்யப்பட்ட அளவு தற்போது போதுமானதாக இல்லை.
இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. நிலத்தடி நீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியவில்லை.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: டி.சுப்புலாபுரம் ஊராட்சிக்கு தற்போது தினமும் 4.77 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. கடந்த 2011க்குப் பின் 13 ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.
ஆனால் குடிநீர் ஒதுக்கீட்டின் அளவு உயரவில்லை. ஊராட்சிக்கு தேவைப்படும் குடிநீரில் 3ல் ஒரு பங்கு மட்டுமே கிடைப்பதால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் ஒதுக்கீடு அளவை உயர்த்த குடிநீர் வாரியம் முன்வரவேண்டும் என்றனர்.

