/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுாரில் தடையை மீறி பட்டாசு வெடிப்பு அதிகரிப்பு
/
கூடலுாரில் தடையை மீறி பட்டாசு வெடிப்பு அதிகரிப்பு
ADDED : பிப் 09, 2025 05:51 AM
கூடலுார்: கூடலுாரில் தடையை மீறி பட்டாசு வெடிப்பதுஅதிகரித்துள்ளதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கூடலுார் நகராட்சியில் பட்டாசு வெடிக்க தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை பின்பற்றும் விதமாக திருமணம், குடும்ப நிகழ்வுகள், இறுதி ஊர்வலம் ஆகியவற்றில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்தனர்.
இதனை சில ஆண்டுகள் மட்டுமே பின்பற்றிய மக்கள் மீண்டும் பட்டாசு வெடிப்பதை கட்டாயமாக்கினர்.
இதனைத் தொடர்ந்துமீண்டும்2024 அக்., பட்டாசு வெடிக்க நகராட்சி கூட்டத்தில் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தடையை மீறுவோர் மீது போலீஸ் நடவடிக்கை,அபராதம் வசூலிக்கப்படும்என ஒலிபெருக்கியில் எச்சரித்தனர்.
ஒரு சில நாட்கள் மட்டுமே இது முழுமையாக அமல்படுத்தப்பட்டது.சமீபத்தில் பட்டாசு வெடித்ததற்காக திருமண மண்டப உரிமையாளருக்கு நகராட்சி நிர்வாகம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக முக்கிய தெருக்களில் மீண்டும் பட்டாசு வெடிப்பது அதிகரித்துள்ளது. நகராட்சி நிர்வாகமும் இதை கண்டு கொள்ளவில்லை.
பொதுமக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கும் வகையில் அதிக வெடிச் சத்தத்துடன் கூடிய பட்டாசுகளை தவிர்ப்பதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்திஉள்ளனர்.

