/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் பிடிபடும் மீன்கள் அளவு அதிகரிப்பு l l வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
/
வைகை அணையில் பிடிபடும் மீன்கள் அளவு அதிகரிப்பு l l வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
வைகை அணையில் பிடிபடும் மீன்கள் அளவு அதிகரிப்பு l l வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
வைகை அணையில் பிடிபடும் மீன்கள் அளவு அதிகரிப்பு l l வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 04, 2024 03:50 AM

வைகை அணை நீர் தேக்கம் 10 சதுர மைல் பரப்பில் கடல்போல் பரந்து விரிந்துள்ளது. வைகை அணை நீர்த்தேக்கத்தில் மீன்வளத்துறை மூலம் மீன் குஞ்சுகள் வளர்ப்பிற்கு விடப்பட்டு, வளர்ந்தபின் அவற்றை பிடித்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வைகை அணையில் மீன் பிடிப்பதற்கான உரிமம் தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீனவர் கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற மீனவர்கள் மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு மீன்பிடி ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அணையில் வளர்ப்புக்காக விடப்பட்ட கட்லா, மிருகாள், ரோகு வகை மீன்களுடன் ஆறா, ஜீலேபி, சொட்டைவாளை, உளுவை உட்பட இயற்கையாக வளரும் மீன்களும் அதிகம் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் அணை நீர்மட்டம் 65 அடி முதல் 71 அடி வரை பராமரிக்கப்பட்டது. கோடை துவங்கியதால் நீர் வரத்து குறைந்து அணை நீர்மட்டமும் குறைகிறது. நீர்மட்டம் நேற்று 61.25 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணையில் நீர்மட்டம் குறைவதால் பிடிபடும் மீன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறியதாவது: கடந்த மாதங்களில் தினமும் 500 கிலோ மீன்கள் பிடிபட்டன. தற்போது வைகை அணையில் தினமும் 700 முதல் 1000 கிலோ அளவிலான மீன்கள் பிடிபடுகிறது. அணையின் நீர் மட்டம் குறைய, குறைய அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 2 ஆயிரம் கிலோ மீன்கள் பிடிபடும். வைகை அணை மீன்களுக்கு தனிச்சுவை இருப்பதால் பொதுமக்கள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். வியாபாரிகள் மூலமும் பல இடங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. வகைக்கு தக்கபடி கிலோ ரூ.150 முதல் 200 வரை விலை உள்ளது. ஆடு, கோழி இறைச்சியுடன் ஒப்பிடுகையில் மீன்கள் விலை குறைவாக இருப்பதால் பயன்பாடு அதிகரித்துள்ளது என இவ்வாறு தெரிவித்தனர்.

