/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு -நீர்மட்டம் 136 அடியாக குறைந்தது

ADDED : பிப் 01, 2024 02:21 AM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கடந்த சில நாட்களாக தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை 6:00 மணியிலிருந்து நீர் திறப்பு 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பதிவாகவில்லை. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 159 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 6118 மில்லியன் கன அடியாகும்.
2023 டிச. 24ல் நீர்மட்டம் அதிகபட்சமாக 141 அடியை எட்டியது. அதன் பின் மழை குறைவால் நீர்மட்டமும் குறைய துவங்கியது. தமிழகப்பகுதிக்கு நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைந்து நேற்று காலையில் 136 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி).
நீர் திறப்பு அதிகரிப்பால் தேனிமாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின்நிலையத்தில் 90 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி 135 மெகா வாட்டாக அதிகரிக்கப்பட்டது.