/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் நோயாளிகள் வருகை அதிகரிப்பு
/
வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் நோயாளிகள் வருகை அதிகரிப்பு
வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் நோயாளிகள் வருகை அதிகரிப்பு
வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் நோயாளிகள் வருகை அதிகரிப்பு
ADDED : மார் 15, 2024 06:35 AM
கம்பம் : மாவட்டத்தில் காய்ச்சல் பரவுவதால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் கிளினிக்குகளில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனோவிற்கு பின் பல வகையான வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகிறது. அவ்வப்போது வரும் வைரஸ் காய்ச்சல் பெரிய பாதிப்பின்றி சென்று விடுகிறது. தற்போது கம்பம், சின்னமனுார், ஆண்டிபட்டி, பெரியகுளம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
ஒரு வாரத்திற்கும் மேலாக மாவட்டம் முழுவதும் பரவலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் பொது சுகாதார துறை எந்தவித முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் கிளினிக்குகளிலும் காய்ச்சலால் பாதித்தவர்களின் கூட்டம் குவிந்து வருகிறது.
காய்ச்சல் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு சளி, இருமல், உடல் சோர்வால் அவதிப்பட்டு வருகின்றனர்.அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மணிகண்டன் கூறுகையில், காய்ச்சல் ஆங்காங்கே உள்ளது. இது வைரஸ் காய்ச்சல் இல்லை. அதிக வெயில் உள்ளது. காலை 11:00 முதல் பிற்பகல் 3:00 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
இளநீர், - மோர், எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளலாம். சிறுநீரக தொற்று பாதிப்பு இருக்காது. வெப்பம், தேவையான தண்ணீர் குடிக்காததாலும் சிறுநீர் பையில் புண் ஏற்படும். இதனால் காய்ச்சல் வரலாம். பொதுமக்கள் சுகாதாரத்துறையின் அறிவுரையை ஏற்று அதிக தண்ணீர் குடிக்க வேண்டும், வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும், என்றார்.

