/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு
/
வைகை அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு
ADDED : நவ 15, 2024 02:32 AM
ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடியில் இருந்து 3630 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் வைகை பூர்வீக பாசனப்பகுதி 3ல் உள்ள நிலங்களுக்கு நவ. 10ல் வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. வெளியேறும் நீரின் அளவு நவ. 12ல் 2500 கன அடியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்கள், பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன நிலங்களுக்காகவும் கால்வாய் வழியாக வினாடிக்கு 1130 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து தற்போது பாசனத்திற்காக வெளியேறும் மொத்த நீரின் அளவு வினாடிக்கு 3630 கன அடி. நேற்று அணை நீர்மட்டம் 62.24 அடியாக இருந்தது( மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 848 கன அடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.