/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரத்து அதிகரிப்பு: குறைந்த விலைக்கு விற்ற சம்பங்கி * கிலோ ரூ.60
/
வரத்து அதிகரிப்பு: குறைந்த விலைக்கு விற்ற சம்பங்கி * கிலோ ரூ.60
வரத்து அதிகரிப்பு: குறைந்த விலைக்கு விற்ற சம்பங்கி * கிலோ ரூ.60
வரத்து அதிகரிப்பு: குறைந்த விலைக்கு விற்ற சம்பங்கி * கிலோ ரூ.60
ADDED : டிச 09, 2024 05:41 AM
தேனி: தேனி பூ மார்க்கெட்டில் சம்பங்கி பூ வரத்து அதிகரிப்பால் விலை ரூ.60க்கு விற்பனையானது. நான்கு நாட்களுக்கு முன் சம்பங்கி பூ கிலோ ரூ.250க்கு விற்பனையானது.
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் பூ மார்க்கெட் செயல்படுகிறது. தேனி, அல்லிநகரம், பூதிப்புரம், கொடுவிலார்பட்டி, அரப்படித்தேவன்பட்டி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை யாகும் பூக்கள் தேனி பூமார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு நேற்று மல்லிகை ரூ.ஆயிரம் முதல் ரூ.1300 வரை விற்பனையானது. மற்ற பூக்கள் கிலோ முல்லை ரூ.500, ஜாதிமல்லி ரூ.400, பன்னீர் ரோஸ் ரூ.150. பட்டன் ரோஸ் ரூ.300-350, வாடாமல்லி ரூ.50, கோழிக்கொண்டை ரூ.50, செண்டுமல்லி ரூ.30, செவ்வந்தி ரூ.100-150, அரளி ரூ.200, சம்பங்கி ரூ.60க்கு விற்பனையானது.
பூ வியாபாரி குமார் கூறுகையில், 'சில தினங்களுக்கு முன் சம்பங்கி கிலோ ரூ.250க்கு விற்பனையானது. கடந்த சில தினங்களாக சம்பங்கி பூக்கள் வரத்து அதிகரிப்பு, விஷேங்கள் அதிக அளவில் இல்லாததால் சம்பங்கி பூ விலை குறைந்துள்ளது.', என்றார்.