/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிப்பு

ADDED : செப் 29, 2025 02:01 AM
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களின் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து செப்., 18 ல் வினாடிக்கு 1330 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டது. நீர் திறப்பால் பெரியாறு பாசனப்பகுதியில் உள்ள ஒரு போக பாசன பரப்பில் 85 ஆயிரத்து 563 ஏக்கர், திருமங்கலம் பிரதான கால்வாயில் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்கள் 19 ஆயிரத்து 439 ஏக்கர் நிலங்களும் பயன் பெறுகின்றன. இந்நிலையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று வினாடிக்கு 1731 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேற்றப்படுகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 66.73 அடியாக இருந்தது. அணை மொத்த உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1287 கன அடியாக இருந்தது.