/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செந்நாய்கள் நடமாட்டம் அதிகரிப்பு
/
செந்நாய்கள் நடமாட்டம் அதிகரிப்பு
ADDED : டிச 19, 2025 05:44 AM

மூணாறு: மூணாறு பகுதியில் செந்நாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளன.
மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு மாடு, யானை, புலி, சிறுத்தை ஆகியவை அதிகமாக நடமாடி வருகின்றன. யானைகளிடம் சிக்கி உயிர் பலி ஏற்பட்டுள்ள நிலையில், புலியிடம் சிக்கி பலியாகும் பசுக்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. அதே போல் காட்டு மாடு தாக்கியும் படுகாயத்துடன் பலர் உயிர் தப்பினர்.
தற்போது செந்நாய்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளன. அவை கூட்டமாக வலம் வருவதை பல பகுதிகளில் காண முடிகிறது. மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை எஸ்டேட் பகுதியில் நேற்று காலை 10:00 மணிக்கு நான்கு செந்நாய்கள் ரோட்டில் ஓடிக் கொண்டிருந்தன. வளர்ப்பு நாய்கள் என எண்ணிய பலர், அவற்றின் மீது கவனம் செலுத்தாமல் ரோட்டில் நடந்து சென்றனர். பிறகு கூர்ந்து கவனித்தபோது செந்நாய்கள் என தெரியவந்தது. அதனை அறிந்த சுற்றுலா பயணிகள் செந்நாய்களை ஆர்வமுடன் பார்த்தனர். அவை அப்பகுதியில் உள்ள மைதானம் வழியாக காட்டிற்குள் சென்றன. செந்நாய்கள் நடமாட்டம் கால்நடை வளர்ப்பவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

