/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் திருட்டு அதிகரிப்பு! குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
/
முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் திருட்டு அதிகரிப்பு! குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் திருட்டு அதிகரிப்பு! குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் திருட்டு அதிகரிப்பு! குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
ADDED : மே 15, 2024 07:10 AM

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 2 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கரும், மதுரை மாவட்டத்தில் சில இடங்களில் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது.
கடந்த மார்ச்-சில் இரண்டாம் போக நெல் சாகுபடி முடிவடைந்த நிலையில் குடிநீருக்காக மட்டும் அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி திறக்கப்பட்டுள்ளது.
லோயர்கேம்ப், கூடலுார், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், கோட்டூர், வீரபாண்டி வழியாக வைகை அணையில் சேருகிறது. ஆற்றின் கரையோரப் பகுதியில் பல குடிநீர் திட்டங்கள் உள்ளன.
தற்போது குடிநீருக்காக திறக்கப்பட்ட 100 கன அடி நீரில் 20 கன அடி மதுரை குடிநீர் திட்டத்திற்காக சோதனை செய்யும் பணிக்கு திறக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 80 கன அடி நீர் வைகை அணை வரை செல்ல முடிவதில்லை.
லோயர்கேம்பில் துவங்கி ஆற்றின் கரையோரப் பகுதியில் பல இடங்களில் விவசாயத்திற்காக தடையை மீறி மோட்டார் மூலம் தண்ணீர் திருடப்படுகிறது. இதனால் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அணையில் தண்ணீர் திறக்கும் வரை குடிநீர் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
அவ்வப்போது பொதுப்பணித்துறையினர் கரையோரப் பகுதியில் சோதனை மேற்கொண்டு தடையை மீறி பயன்படுத்தும் மோட்டார்களை பறிமுதல் செய்வதுடன் மின் இணைப்பையும் துண்டித்து வருகின்றனர். ஆனால் ஓரிரு நாட்களிலேயே மீண்டும் திருடப்பட்டு வருகிறது. தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தண்ணீர் திருடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

