/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு; குடிநீரை காய்ச்சி குடிக்க ஆலோசனை
/
குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு; குடிநீரை காய்ச்சி குடிக்க ஆலோசனை
குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு; குடிநீரை காய்ச்சி குடிக்க ஆலோசனை
குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு; குடிநீரை காய்ச்சி குடிக்க ஆலோசனை
ADDED : நவ 13, 2024 11:56 PM
பெரியகுளம்; பெரியகுளம் பகுதியில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனையில்
தினமும் 20 குழந்தைகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
பெரியகுளம் பகுதியில் தொடர் மழை, சீதோஷ்ண நிலை மாற்றத்தால் நவ. 11ல் 200 க்கும் அதிகமானோர்
வைரஸ் காய்ச்சலால் பாதித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நவ.12ல் 50 ஆகவும், நேற்று 51 ஆகவும் குறைந்தது. உள்நோயாளிகளாக 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நவ.11 முதல் நேற்று வரை குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நவ.11ல் குழந்தைகள் காய்ச்சல் பாதித்து வெளிநோயாளியாக 17 பேரும், அடுத்தடுத்த நாட்களில் தினமும் 22 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் உள்நோயாளியாக ஆறு குழந்தைகள் சிகிச்சையில் உள்ளனர்.
நிலைய மருத்துவ அலுவலர் மகேஸ்வரி கூறுகையில்,' வைரஸ் காய்ச்சல் 3 நாட்களுக்கு நீடிக்கும்.
மூன்று நாட்களை கடந்தும் காய்ச்சல் உள்ளவர்களை உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சலுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் கையிருப்பு உள்ளது. பாராசிட்டமால், அவில் மாத்திரைகளும், வாயில் புண், மாத்திரை சாப்பிட முடியாதவர்களுக்கு ஊசி போடப்படுகிறது. டெங்கு, மலேரியா காய்ச்சல் இல்லை. காய்ச்சல் பாதிப்புக்குள்ளனவர்கள் சுடுதண்ணீரை ஆற வைத்து குடிக்க வேண்டும்' என்றார்.
தனியார் மருத்துவமனையில் கூட்டம்
பெரியகுளம் தாலுகா பகுதிகளில் தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் 300 க்கும் அதிகமானோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.