/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உணவுப்பொருள், போதை தடுப்பு பிரிவுகளை அதிகரிக்கணும்: சட்டவிரோத கடத்தல்களை தடுக்க உதவும்
/
உணவுப்பொருள், போதை தடுப்பு பிரிவுகளை அதிகரிக்கணும்: சட்டவிரோத கடத்தல்களை தடுக்க உதவும்
உணவுப்பொருள், போதை தடுப்பு பிரிவுகளை அதிகரிக்கணும்: சட்டவிரோத கடத்தல்களை தடுக்க உதவும்
உணவுப்பொருள், போதை தடுப்பு பிரிவுகளை அதிகரிக்கணும்: சட்டவிரோத கடத்தல்களை தடுக்க உதவும்
ADDED : டிச 26, 2024 05:30 AM
கம்பம்: தேனி மாவட்டத்திற்கு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஸ்டேஷன், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஸ்டேஷன் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டத்தில் கஞ்சா, பெத்தமெட்டமைன், போதை மாத்திரைகள், போலி மது விற்பனை பரவலாக உள்ளது. கள்ளச்சாரய ஊரல்களும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. போலி மது, கள்ளச்சாரயம், அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனையை தடுக்க மாவட்டத்தில் மதுவிலக்கு போலீஸ் ஸ்டேசன்கள் உத்தமபாளையம், தேனியில் செயல்படுகிறது. கஞ்சா, போதை மாத்திரை, மற்றும் போதை வஸ்துக்கள் கடத்தல், விற்பனை செய்வோர் மீது தேனியில் செயல்படும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர் நடவடிக்கை எடுக்கின்றனர்.
இப் பிரிவினர் குமுளியில் இருந்து தேவதானப்பட்டி வரையும் மேகமலை, குமுளி மலை, கம்பமெட்டு , போடிமெட்டு, கொடைக்கானல் மலையின் ஒரு பகுதி, வெள்ளிமலை, அரசரடி என மலைப்பகுதிகளும், போடி , ஆண்டிபட்டி என பரந்து விரிந்த எல்லைகள் உள்ளது. இதனால் குறைந்த எண்ணிக்கையிலான போலீசாரை வைத்து போதை கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் சுணக்கம் நிலவுகிறது.
இதே போல உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஸ்டேஷன் உத்தமபாளையத்தில் மட்டும் உள்ளது.
ரேஷன் அரிசி கடத்தல், ரேஷன் அரிசியை மாவாக அரைத்தல், மண்ணெண்ணெய் கள்ள மார்க்கெட்டில் விற்பனை, உணவு பொருள் கலப்படம் என பல குற்றங்களை தடுக்க இந்த பிரிவு செயல்படுகிறது. உத்தமபாளையத்தில் உள்ள இப்பிரிவு போலீசார் பெரியகுளம், ஆண்டிபட்டி பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை கண்காணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
மேலும் கேரளா எல்லையோரா மாவட்டமாக தேனி இருப்பதால் மாநில எல்லையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
எனவே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு புட்செல் போலீஸ் ஸ்டேசன், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு கூடுதலாக ஸ்டேஷன்களை துவக்க வேண்டும் . அப்போதுதான் அதற்கான இலக்கை அடைய முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.