/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தித் திறனை அதிகரியுங்கள் n கூடுதல் ஜெனரேட்டர் அமைப்பது அவசியம்
/
சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தித் திறனை அதிகரியுங்கள் n கூடுதல் ஜெனரேட்டர் அமைப்பது அவசியம்
சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தித் திறனை அதிகரியுங்கள் n கூடுதல் ஜெனரேட்டர் அமைப்பது அவசியம்
சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தித் திறனை அதிகரியுங்கள் n கூடுதல் ஜெனரேட்டர் அமைப்பது அவசியம்
ADDED : டிச 05, 2025 05:36 AM

தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப்பில் பெரியாறு நீர்மின்நிலையம், வண்ணாத்திபாறையில் சுருளியாறு மின்நிலையம் உள்ளன. சுருளியாறு மின்நிலையத்திற்கு தேவையான தண்ணீர் இரவங்கலாறு அணையிலிருந்து வனப்பகுதி வழியாக குழாய் மூலம் கொண்டுவரப்படுகிறது. இதற்கென இரவங்கலாறு அணையில் இருந்து வண்ணாத்திபாறை வரை 2900 மீ., நீள குழாய் அமைத்து, 971 மீட்டர் உயரத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஆசியாவிலேயே மிக உயரத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து மின்சாரம் தயாரிக்கும் நீர் மின் நிலையங்களில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது.
மேகமலையில் உள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணைகளில் சேகரமாகும் நீரை பயன்படுத்தி மின் உற்பத்தியாகிறது. 141 கன அடி நீரில் 35 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் உள்ளது.
ஆனால் பெரியாறு மின் நிலையத்தில் குறைந்தது 400 கன அடி தண்ணீர் இருந்தால் தான் 35 மெகாவாட் உற்பத்தி செய்ய முடியும். காரணம் கருளியாறு மின் நிலையத்தில் மிக உயரமான இடத்தில் இருந்து தண்ணீர் கீழே இறக்கப்படுகிறது . உயரம் அதிகரிக்க அதிகரிக்க குறைவான நீரில் மின் உற்பத்தி அதிகரிக்கும் என்கின்றனர்.
இந்த மின் நிலையத்திற்கு தண்ணீர் வரும் குழாயில் 220 மீ., நீளத்திற்கு நீரின் அழுத்தம் தாங்காமல் 2021 ல் குழாய் வெடித்தது. இரு ஆண்டுகளுக்கு பின் மின் உற்பத்தி துவங்கியது.
பழமையான ஜெனரேட்டரை மாற்ற வேண்டும் ஆண்டுதோறும் பல ஆயிரம் கனஅடி நீர் வீணாக வெளியேறுகிறது. இங்கு அதிக பட்சம் 141 கன அடி நீர் மட்டுமே எடுக்க முடியும். இதற்கு காரணம் ஒரே ஒரு ஜெனரேட்டர் மட்டுமே உள்ளது. எனவே இம் மின் நிலையத்தில் கூடுதல் ஜெனரேட்டர் நிறுவி மின் உற்பத்தியை அதிகரிக்கலாம். அல்லது 35 மெகாவாட் திறன் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சேகரமாகும் நீர் வீணாகாமல் மின் உற்பத்திக்கு பயன்படும்.
கடந்த முறை டர்பைனில் ஏற்பட்டுள்ள சிறிய கோளாறை ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் நமச்சிவாயம் தலைமையிலான குழுவினர் சீரமைத்தது குறிப்பிடத்தக்கது. மிகவும் பழமையான ஜெனரேட்டரை மாற்றி நவீன ஜெனரேட்டரை நிர்மானிக்க வேண்டும் என்ற - கோரிக்கை எழுந்துள்ளது.

