/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரியுங்கள்; தரம் உயர்த்திய ஸ்டேஷன்களில் கூடுதல் போலீசார் தேவை
/
மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரியுங்கள்; தரம் உயர்த்திய ஸ்டேஷன்களில் கூடுதல் போலீசார் தேவை
மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரியுங்கள்; தரம் உயர்த்திய ஸ்டேஷன்களில் கூடுதல் போலீசார் தேவை
மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரியுங்கள்; தரம் உயர்த்திய ஸ்டேஷன்களில் கூடுதல் போலீசார் தேவை
ADDED : நவ 06, 2025 07:09 AM

மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய 5 சப் -டிவிஷன்கள் உள்ளன. தேனி, பெரியகுளத்தில் தலா 5, உத்தமபாளையம், ஆண்டிபட்டியில் தலா 9, போடியில் 8 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
இதில் ஒவ்வொரு சப்- டிவிஷனிலும் தலா ஒரு மகளிர் ஸ்டேஷன்கள் அடங்கும். இது தவிர போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் தேனி, பெரியகுளம், கம்பம், போடியில் உள்ளன. மாவட்டத்தில் 36 போலீஸ் ஸ்டேஷன்கள், டிராபிக் ஸ்டேஷன் 4 என மொத்தம் 40 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
இதில் பழனிசெட்டிபட்டி 39, வீரபாண்டி 31, தேவதானப்பட்டி 25, போடிடவுன் 33, ஆண்டிபட்டி 50, கடமலைக்குண்டு 40 குக் கிராமங்கள் உள்ளடக்கி உள்ளன. இதில் போடி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் போடி டவுன், தாலுகா, சின்னமனுார், தேவாரம், கோம்பை, குரங்கணி ஸ்டேஷன்கள் கட்டுப்பாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்டகுக்கிராமங்கள் உள்ளன.
பழனிசெட்டிபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட சில ஸ்டேஷன்களுக்கு அதிக பரப்பளவாக உள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட துாரம் பயணித்து புகார் வழங்கும் அவல நிலை தொடர்கிறது. இந்த ஸ்டேஷன் எல்லைகளில்இரு வெவ்வேறு இடங்களில் குற்ற சம்பவங்கள்நடந்தால் போலீசார் சம்பவ இடங்களுக்கு உடனேசெல்வதில் தாமதம் ஏற்படுகிறது.
இதனால் கடந்த ஆண்டுகளில் அதிக எப்.ஐ.ஆர்.,க்கள் பதிவாகின, கூடுதல் பரப்பளவை கொண்ட போலீஸ் ஸ்டேஷன்களை இரண்டாக பிரிக்க வேண்டும். சின்னமனுார், ஆண்டிபட்டி பகுதிகளில் போக்குவரத்துநெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே போல் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் எஸ்.ஐ.,க்கள், போலீசார் மாற்றுப்பணியாக சைபர் கிரைம், மாவட்ட குற்றப்பிரிவு, வெடிகுண்டு கண்டறியும் பிரிவு, போதை தடுப்பு பிரிவு, நக்சல் தடுப்பு பிரிவுகளில் பணிபுரிகின்றனர். சிலர் மருத்துவ விடுப்புகளிலும் சென்றுவிடுகின்றனர். இதனால் ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை நிலவுகிறது.
இதனால் பணியில் உள்ள போலீசார்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. இதில் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். அதே போல் சில மாதங்களுக்கு முன் 9 போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்டு இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த ஸ்டேஷன்களுக்கும் கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

