UPDATED : அக் 12, 2026 12:11 AM
ADDED : அக் 11, 2026 04:26 PM

அ நிறம் | அளவு
மூணாறு: சுற்றுலா நகரான மூணாறில் ரோட்டோரம், நடைபாதை ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றன.
இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதியடைகின்றனர். நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற ஊராட்சி சார்நில் நோட்டீஸ் வினியோகித்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் நேற்று பல இடங்களில் ரோடுகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருந்தன. விடுமுறை நாளான நேற்று தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பொருட்கள் வாங்க வந்திருந்தனர், பயணிகள் கூட்டமும் அதிகமிருந்தது. தற்காலிகமாக முளைக்கும் கடைகளால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்துகின்றன. ஆனாலும் ஊராட்சி நிர்வாகம், போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை.
