/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுதந்திர தின விழிப்புணர்வு ஊர்வலம்
/
சுதந்திர தின விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 13, 2025 02:20 AM

தேனி: தேனி கோட்ட தபால்துறை சார்பில், திரங்கா யாத்திரை என்ற தலைப்பில் சுதந்திர தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கோட்ட கண்காணிப்பாளர் குமரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பெரியகுளம் ரோடு ரயில்வே கேட், நேருசிலை வரை சென்று, மீண்டும் தலைமை தபால் நிலையம் வந்தடைந்தது. முன்னதாக கண்காணிப்பாளர் பேசியதாவது: இந்த இயக்கம் ஒவ்வொரு இல்லத்திலும் தேசியக் கொடி என்பதே நோக்கம். அனைத்து குடியிருப்பிலும் மக்கள் தேசியக் கொடியை ஏற்றி தேசப்பற்று, தேசிய உணர்வை வளர்ப்பதாகும். இந்தியாவின் ஒற்றுமை, பெருமையை பிரதிபலிக்கும் விதமாக மக்கள் பங்கேற்பு இயக்கமாக மாறியது.
இதன் மூலம் அனைத்து வீடுகளில் பறக்கும் மூவர்ணக் கொடி அதன் மதிப்பையும், உயர்ந்த பண்புகளையும் பிரதிபலிக்கும் என்றார். பள்ளி மாணவ, மாணவிகள், தபால்துறை ஊழியர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.