/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'‛இண்டியா காபி' செயலியில் பதிவு செய்தால் மட்டுமே ஐரோப்பாவில் விற்க முடியும்; காபி வாரிய துணை இயக்குனர் தகவல்

ADDED : ஆக 27, 2025 12:37 AM
தேனி; இந்தியா காபி'செயலியில் பதிவு செய்த விவசாயிகள் மட்டுமே ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்ய முடியும் என போடி காபி வாரிய துணை இயக்குனர் தங்கராஜா தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இயங்கிவரும் ஒழுங்குமுறை ஆணையம், தங்களது நாடுகளில் பொருட்கள் காடழிப்பு இல்லாத நிலங்களில் இருந்து வந்தவை என்பதை கட்டாயமாக்குவதற்கு சட்டம் இயற்றியுள்ளது. துல்லியமான புவியியல் இருப்பிடத் தரவுகள் மூலம் விரிவான ஆதாரங்களை வழங்கிய நிறுவனங்களுக்கு மட்டுமே பொருட்களை விற்க அனுமதி வழங்குகிறது.
இதில் சோயா, காபி, காவோ,எண்ணெய், மரக்கட்டை, ரப்பர் போன்ற பொருட்கள் அடங்கும்.
காபி வாரிய துணை இயக்குனர் தங்கராஜா கூறியதாவது: கர்நாடகா, பெங்களூரூவில் இயங்கிவரும் காபி வாரியம், 'இண்டியா காபி' என்ற அலைபேசி செயலியை தயாரித்துள்ளது. காபி விவசாயிகள் தங்களது அலைபேசியில் இச் செயலியை பதிவிறக்கம் செய்து, ஆதார், வங்கிக் கணக்கு புத்தகம், காபி பயிரிடும் நிலத்தின் சிட்டா மற்றும் அடங்கல் ஆகிய ஆவணங்களை பதிவு செய்வது கட்டாயம். இதில் பதிவு செய்தால் மட்டுமேவிவசாயிகள் தங்களது காபி பயிர்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
மேலும் இந்த செயலியில் மானியத் திட்டங்கள், விதை முன்பதிவு, மண் பரிசோதனை பதிவு போன்ற வசதிகளும் உள்ளன. இவற்றையும் காபி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம், என்றார்.