/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இந்திய வாலிபால் அணி கம்பம் மாணவர் தேர்வு
/
இந்திய வாலிபால் அணி கம்பம் மாணவர் தேர்வு
ADDED : ஆக 14, 2025 02:50 AM

கம்பம்: இந்திய வாலிபால் அணியில் விளையாட கம்பம் சி.பி.யூ.,மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1மாணவர் லிபித் சிங் தேர்வாகி உள்ளார்.சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச வாலிபால் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி தேர்வு பணி துவங்கியுள்ளது.
அதில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 8 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் ஆக 27, 28ல் புனேயில் நடைபெறும் தகுதி தேர்வு போட்டிகளில் பங்கேற்கின்றனர். அங்கு தேர்வாகும் வீரர்கள் சீனாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இதற்கென கடந்த வாரம் புதுக்கோட்டையில் நடைபெற்ற தகுதி தேர்வு போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 15 வயதுக்குட்பட்ட 354 மாணவர்கள் பங்கேற்றனர். 8 பேர்களில் ஒருவராக கம்பம் சி.பி.யூ., மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 படிக்கும் மாணவர் லிபித் சிங் லிபிதேர்வாகி உள்ளார். தேர்வான மாணவரை பள்ளி தாளாளர் திருமலை சுதாகரன், பொருளாளர் ராமசாமி, தலைமையாசிரியர் சையது அப்தாகிர் ஆகியோர் பாராட்டினர். பயிற்சியளித்த பள்ளி உடற்கல்வி இயக்குநர் ஆசிக் , உடற்கல்வி ஆசிரியர் இராதாகிருஷ்ணன் ஆகியோரையும் பாராட்டினர்.

