/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி துவக்கம்
/
சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி துவக்கம்
ADDED : மார் 17, 2024 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: லோக்சபா தேர்தல் தேதி அறிவித்தவுடன் போடி நகராட்சி பகுதியில் நேற்று மாலை சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அரசு, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சிகொடி, கம்பம், பிளக்ஸ், பேனர், சுவர் விளம்பரங்களை அகற்ற தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதனையொட்டி நேற்று போடி நகராட்சி பகுதியில் அரசு, பொது இடங்களில் உள்ள சுவரில் எழுதப்பட்டிருந்த கட்சி பெயர், சின்னங்களை அழிக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். கட்சி கொடி கம்பம் பேனர்களை அகற்றுவதற்கான கணக்கெடுக்கும் முறையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

